கவிதைகளின் சங்கமம்..............

Wednesday, June 18, 2008

ந.ராம் குமார்

நீ......

எனக்குப் பிடித்த
பூக்களின்
பட்டியலில்
உன்னையும்
சேர்த்துக்கொள்கிறேன்
நான்
உனக்குப் பிடித்த
விளையாட்டு
பொம்மைகளின்
வரிசையில் என்னையும்
எழுதிக்கொள்கிறாய் நீ......

......ந.ராம் குமார்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
வீணை........
நான்
மீட்டுகிற வீணையின்
கம்பிகள்
என் விரல்களை
அறுத்துவிடுவதை பற்றி
எனக்கு
கவலை இல்லை.
கம்பிகளையே
அறுத்து விடுகிற
உன்னைப் பற்றித்தான்......

......ந.ராம் குமார்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உன் பார்வையால்
வார்தைகளால்
காயப்படுத்துவாய்.
பார்வைகளால்
மருந்திடுவாய்.
மருந்திற்கு
ஆசைப்பட்டு
காயப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன் .

......ந.ராம் குமார்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கண்கள்
வாசிக்கிற
உன்
கண்கள்
மலர்கிற அழகில்
காணாமல் போகும்
கவிதை
எழுதிய
என் கர்வம்......
......ந.ராம் குமார்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
posted by அஜித் குமார் at 8:38 AM

0 Comments:

Post a Comment

<< Home