கவிதைகளின் சங்கமம்..............

Wednesday, June 18, 2008

டி.ஆர்.தாசன்

முத்தம்

இன்னும்
உனக்கு தராத
மிச்ச முத்தங்கள்
நிரம்பி இருக்கிறது
என் உதடுகளில்...

எப்பொழுது
வெள்ளப்பெருக்காகும்
தெரியவில்லை!

எச்சரிக்கையாக இரு...

உன் உதடுகள்
தாங்குமா?
என் முத்தத்தை...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


*
நீ
தனியாக நடந்து போகாதே
ட்ராபிக் ஆகுமென்றேன்!

*
நீ
மெளனமாக இருந்தால்
தாய்மொழியே
தற்கொலை செய்து கொள்ளுமென்றேன்!

*
நீ
பேசும்போது
செவிடனும்
ஒட்டுக்கேட்கிறான் என்றேன்!

*
நீ
ஒருமுறை தும்மிப்பார்
வாசலில் கியூ கணக்குல்
டாக்டர்கள் நிற்பார்கள் என்றேன்!

*
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு
பெரிய நகைச்சுவையை
ரசித்தது போல்
சிரிக்கிறாய்...!

*
புரிந்துகொண்டு சிரிக்கிறாயா...?
புரியாமல் சிரிக்கிறாயா...?

நான் சொல்வது
பொய்யென்று சிரிக்கிறாயா...?

ஏதோ ஒன்று
எப்படியோ
நீ சிரிக்கிறாய்...
அது போதும்

அட!
அதற்கும் சிரிப்பா?


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
posted by அஜித் குமார் at 6:02 AM

1 Comments:

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News

July 4, 2018 at 3:03 AM  

Post a Comment

<< Home